Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் கஞ்சி தண்ணீர்… ட்ரை பண்ணி பாருங்க…!!!

தினமும் கஞ்சித் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருக்கும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து அதனை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை செய்து வர உடல் எடை குறையும். அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். மேலும் இதை குடித்தால் சாப்பிட்டது போல வயிறு நிறைவாக இருக்கும். அதோடு மலச்சிக்கல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

Categories

Tech |