Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“சந்தானம் ஸ்பெஷல்” டீ கடை பெஞ்சில் தொடங்கி…. கவுண்டர்களால் ரசிகர்களை அள்ளியவர்…!!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக மாறி இருப்பவர்தான் சந்தானம். இவர் கொடுக்கும் டைமிங் கவுண்டருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. திரைப்படங்களில் பலரையும் கலாய்த்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் சந்தானம் பற்றிய தொகுப்பு

சாந்தானத்தின் ஆரம்ப வாழ்க்கை 

சந்தானம் சென்னை தாம்பரத்தில் ஜனவரி 21 1980இல் பிறந்தார். சிறுவயது முதல் குறும்புத்தனம் செய்யும் குணமுடைய சந்தானம் படிப்பில் சுமாராக இருந்துள்ளார். டிப்ளமோ முடித்த சந்தானம் ஆரம்பத்தில் வீட்டின் அருகே இருந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் சந்தானத்தின் மாமா பாலாஜி என்பவர் மூலமாக கதை எழுதும் வேலையை பார்த்து வந்துள்ளார். இது அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால் வின் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளுக்கு கதை எழுதுபவராக இருந்துள்ளார்.

டீ கடை பெஞ்சில் ஆரம்பித்த திரை பயணம்

சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் வெளியான டீ கடை பெஞ்சு, சகல vs ரகள, லொள்ளு சபா போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் சந்தானத்தை பிரபலப்படுத்த சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.

2002 இல் வெளிவந்த பேசாத கண்ணும் பேசுமே, காதல் அழிவதில்லை போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து 2004ல் வெளிவந்த மன்மதன் திரை படத்தில் சிம்புவுக்கு நண்பராக நடித்திருந்தார். அது சந்தானத்தின் கரியரில் மிக மிக முக்கியமான படம் என்று கூறலாம்.

அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் சச்சின், பில்லா, எந்திரன் என பல சூப்பர் ஹிட் படங்களில் சந்தானம் நடித்திருந்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சந்தானம் தனது 100வது படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

திறமையால் பெற்ற விருதுகள் 

சந்தானம் அவர்கள் சைமா விருது, எடிசன் விருது, விஜய் விருது என அனைத்திலும் சிறந்த நகைச்சுவையாளருகான விருதுகளை பெற்றுள்ளார். அதோடு நான்கு முறை சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருதையும் சந்தானம் வாங்கியுள்ளார்.

சந்தானம் பெற்ற கௌரவங்கள் 

படிப்படியாக வளர்ந்து வந்த சந்தானம் 2015இல் வெளிவந்த இந்தியாவில் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் 52-வது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருக்கு மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது.

Categories

Tech |