‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பல நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வில்லை. குறிப்பாக சாந்தனு உட்பட சில ஹீரோவாக நடித்த நடிகர்கள் கூட மாஸ்டர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு மட்டுமே பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘மாஸ்டர் படத்தில் விஜய்யின் பூனை வந்த அளவிற்குக்கூட சாந்தனு படத்தில் இல்லை’ என கலாய்த்துள்ளார். இதற்கு பதிலளித்த சாந்தனு ‘ஒரு காட்சியோ , ஒரு படமோ அதுவே ஒரு சாதனைதான்’ என்று கூறியுள்ளார்.