பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு சென்ற ரியோ தன் மகளை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியோ ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் . இதையடுத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் .
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின் வீட்டிற்கு வந்த ரியோவை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது . ரியோவிற்க்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அசத்தலான வரவேற்பு கொடுத்துள்ளனர் . இதன்பின் 100 நாட்கள் மேல் சந்திக்காமல் இருந்த தனது மகளை கண்ணீருடன் கட்டியணைத்து கொஞ்சுகிறார் ரியோ. தற்போது சமூக வலைத்தளங்களில் ரியோ வரவேற்பு வீடியோ வைரலாகி வருகிறது .