ஆப்பிள் பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நமது உடலில் ஜீரணத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, செரிமான மண்டலம் சீராக இயங்க துணைபுரிகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நமது உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பேருதவி புரிகிறது. இவ்வளவு சிறந்த அம்சங்கள் கொண்ட ஆப்பிள் பழத்தை நாம் அதிகளவு உட்கொள்ளும் பட்சத்தில், அதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி விடுகிறது என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது.
நமது உடல் சிறந்து செயல்பட, நார்ச்சத்து மிக முக்கியமான தேவையாகும். ஆனால், இதே நார்ச்சத்து, நமக்கு மிக அதிகளவில் கிடைக்கும்பட்சத்தில், அது செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஒருவரின் வயது மற்றும் அவர் சார்ந்த பாலினத்திற்கு ஏற்ப அவருக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 40 கிராம்கள் அளவிற்கு நார்ச்சத்து தேவைப்படுகிறது. இதன் அளவு 70 கிராம்களாக அதிகரித்தால், செரிமானக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நாள் ஒன்றுக்கு 15 ஆப்பிள்களை சாப்பிட்டால் மட்டுமே, நமக்கு 70 கிராம்கள் நார்ச்சத்து கிடைக்கும். நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஆப்பிள் பழங்கள் மட்டுமல்லாது, பீன்ஸ், முழு கோதுமை, காய்கறிகளின் மூலமும் நமக்கு கிடைக்கிறது. இதன்காரணமாக, நாம் நாள் ஒன்றுக்கு 4 ஆப்பிள்களை உட்கொண்டாலே, 70 கிராம்களுக்கு மேல் நார்ச்சத்து நமக்கு கிடைத்துவிடுகின்றன.
இந்த ஒரு காரணத்திற்காக மட்டும், அதிக ஆப்பிள் சாப்பிட்டால், அதிக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணிவிடாதீர்கள். அதிக ஆப்பிள் சாப்பிடும் பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு உபாதைகள் வரலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் அல்லது நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள், பழங்களை சிறிது சாப்பிட்டாலும், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. நீரழிவு பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொண்டு வரும் இன்சுலின் சிகிச்சை உள்ளிட்ட மருந்துகளின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஆப்பிள் விளைச்சலின் போது, விவசாயிகள் diphenylamine என்ற வேதிப்பொருளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேதிப்பொருளில், புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் அதிகளவில் இருப்பதால், ஐரோப்பிய யூனியன் அமைப்பு, இதற்கு தடைவிதித்துள்ளது. ஆப்பிள் விளைச்சலில், இந்த வேதிப்பொருள் மட்டுமல்லாது மேலும் பல்வேறு வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்பிளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நமது உடலில் கொழுப்புகளாக தங்கி விடுகிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு, நமது உடல் எடையை பெருமளவிற்கு அதிகரித்து விடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க நாம் அதிகம் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.