Categories
சினிமா தமிழ் சினிமா

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்… கொந்தளித்த இயக்குனர்…!!!

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இயக்குனர் லக்ஷ்மண் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் லக்ஷ்மண் தயாரிப்பில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படம் எடுத்தேன். உங்களுக்காக தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்சியல் தெரியாதா?. நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். நீங்க ஜெயிச்சுட்டீங்க. நான் தோத்துட்டேன்” என்று தனது ஆதங்கத்தை அதில் வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |