வேலை நேரத்தில் கிரிக்கெட் பார்ப்பது குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் ஒரு ட்விட்டரை பகிர்ந்துள்ளார்.
வேலை நேரத்தில் ஏன் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறாய் என்று யாராவது கேட்டால் கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூட டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என அவரது ட்விட்டை காட்டுங்கள் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியில் ஆசிரியர் சந்திரா ஆர் காந்த் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை பாராட்டி சுந்தர்பிச்சை ட்விட்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.