Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப்… புதிய வசதி… Wow..!!

வாட்ஸ் அப்பில் புதிய Read later அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சில விதிமுறைகளை மாற்றியது. தனி நபரின் செல்போன் விவரங்களை பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் வாட்ஸ் அப்பிற்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். பலர் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி சிக்னல், டெலிகிராம் போன்ற பல்வேறு ஆப்களை நாடினர். இதனால்
வாட்ஸ்அப் இன் மவுசு குறைய ஆரம்பித்தது. பின்னர் பலர் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மீண்டும் தனிநபரின் விவரங்கள் பரிமாற்றம் செய்யப்படாது என அறிவித்தது.

மீண்டும் வாட்ஸ்அப் பயனாளர்களை தங்கள் பக்கம் இருப்பதற்காக பல வசதிகளை செய்து வருகிறது. தற்போது வாட்ஸப்பில் புதியதாக Read later என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீட் லேட்டர் வம்சம் மூலம் நீங்கள் படிக்காத சேட்டுகளை தனியாக சேகரிக்க முடியும். தற்போது உள்ள Archives போல இந்த அம்சம் பயன்பட்டாலும், ஆர்கைவ்ஸ்ல் நாம் சேகரித்து வைத்திருக்கும் நபரிடமிருந்து புதிய மெசேஜ் வந்தால் சேட்டில் காட்டிவிடும். ரீட் லேட்டரில் அந்த நபரிடம் இருந்து மெசேஜ் காட்டாது.

Categories

Tech |