Categories
தேசிய செய்திகள்

ஐயா.! அது துப்பாக்கி இல்லை… வெறும் சிகரெட் லைட்டர் தான்… நீதிமன்றத்தில் அரங்கேறிய டுவிஸ்ட்…!

மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார்.

சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியே அல்ல, அது வெறும் சிகரெட் லைட்டர் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களின் ஆய்விலும் எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சையதுவிற்கு ஜாமின் வழங்கியது.

Categories

Tech |