Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்… பணம் பறித்து கொலை மிரட்டல்… இருவர் கைது..!!!

கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர்.

பின்னர்  கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனையடுத்து சீனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கிழக்கு காவல் துறையினர் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |