Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு மரியாதை இல்லை… திருப்பதி சென்ற ரோஜா… கூட்டத்தில் ஆவேசம்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.

நடிகை ரோஜா கூட்டத்தில் பேசியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் செல்லும் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக என் பதவிக்கு கூட மரியாதை தராமல் தேவஸ்தான அதிகாரி என்னை புறக்கணித்தார் என்று தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் கோவர்த்தன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ரோஜாவின் முறைகேடுகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Categories

Tech |