நடிகர் ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் போலீஸ் அதிகாரியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த வாரம் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் இயக்குனர் அபின் இயக்கும் புது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கவிருக்கிறார்.
இந்த புதிய படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனைதொடர்ந்து ஆரி நடித்து முடித்த களிங்கன் இயக்கியுள்ள பகவான் மற்றும் ராஜ மித்திரன் இயக்கியுள்ள அலேகா போன்ற படங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.