Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகநூலில் லீலைகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ…. பிளான் போட்டு பிடித்த மக்கள்….!!

பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனால் அவருடைய வழியிலேயே சென்று அவரை பிடிக்க திட்டமிட்டார். அந்த பெண் அந்த வாலிபரை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து எங்கு வரவேண்டும் எப்போது வரவேண்டும் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார். அதன்படி அந்த வாலிபர் நேற்று முன்தினம் உப்புக்கோட்டை என்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அங்கே அந்த பெண் தன் கணவர் மற்றும் மகனுடன் காத்திருந்தார். அந்த வாலிபரை அந்த பெண் அடையாளம் காட்ட, அவரது கணவர் மற்றும் மகன் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த தகவல் உப்புக்கோட்டை கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து வாலிபர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.

Categories

Tech |