மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் வீடு திரும்பியுள்ளார்.
இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுபின் தன் படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் துணியினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் சுபினின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.