பாரிஸில் சைக்கிளைக் கொண்டு இளைஞர் ஒருவர் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸில் இளைஞர் ஒருவர் சைக்கிளைக் கொண்டு 768 படிக்கட்டுகளைக் கொண்ட 33 மாடி கட்டிடத்தை தரைத் தளத்தில் இருந்து மேல்தள படிக்கட்டு வரை 30 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. அவர் இந்த சாதனை கின்னஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.