தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அமித்ஷா கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா உடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நடந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 55 தொகுதிகளை ஒதுக்கும்படி அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி 55 தொகுதிகளை ஒதுக்க முடியாது. 25 முதல் 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியுள்ளார். அதனால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடிக்கிறது.