Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த பழத்தில் இத்தனை நன்மைகளா”..? தினமும் 2 சாப்பிட்டால் கூட போதும்… நோய் எல்லாம் பறந்து போய்விடும்..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.   

ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.  

நாகப்பழம்நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும்இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. 

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

 

இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் நிறைந்த பழம். இதனை தினமும் உண்டு வரும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

தொடர்புடைய படம்

நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் எலும்புகள் வலிமை பெறுகிறது .

இதனை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.

 

தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.பசியைத் தூண்டக்கூடியது.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து.நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

Categories

Tech |