Categories
சென்னை மாநில செய்திகள்

நிறைய திட்டம் இருக்கு…. அதிகமா நிதி ஒதுக்குங்க…. துணை முதலமைச்சர் வேண்டுகோள்…!!

கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனவரி 29-ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காணொலி காட்சி மூலம் பங்கேற்க  உள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் நிதி குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு, நீர் பற்றாக்குறையை போக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயம் மற்றும் மீன்வளத் துறை கூடுதல் நிதிஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் 5.50 நிதி ஒதுக்கீடு, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை 4 லட்சமாக அதிகரிக்கவும், முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |