Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது ‌. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இறுதிப்போட்டிக்கு ஆரி ,பாலா ,ரியோ, ரம்யா ,சோம் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஆரி டைட்டில் வின்னரானார். அவருக்கு டைட்டில் வின்னர் கோப்பையுடன் 50 லட்சத்துக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார்.

தற்போது டைட்டில் வின்னர் ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இரண்டாவது இடத்தை பிடித்த பாலாஜிக்கு இயக்குனரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சேரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . அதில் ‘பிக்பாஸில் ரன்னராக வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மை முகமும் எதையும் சுலபமாக கடந்து சென்று தன்னை மாற்றிக் கொள்ளும் குணமும் கவர்ந்தது… கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்… வாழ்த்துக்கள் பாலாஜி’ என பதிவிட்டுள்ளார் ‌.

Categories

Tech |