இயக்குனர் வெங்கட்பிரபு ‘ஈஸ்வரன்’ படக்குழு பரிசு கொடுத்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பொங்கல் விருந்தாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .
Received #EeswaranPongalSeeru from #Eeswaran family 😃 What a lovely gesture! Hearing wonderful things about the film… Happy for my brother @SilambarasanTR_, #Susienthiran sir & Producer @madhavmedia 💥@gobeatroute #EeswaranPongal pic.twitter.com/S0472OWWeB
— venkat prabhu (@vp_offl) January 18, 2021
இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் , புரோடக்சன் யூனிட் மெம்பர்கள் என அனைவருக்கும் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் பொங்கல் சீர்வரிசை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் பொங்கல் பரிசு வழங்கியுள்ளனர். இதனை ட்விட்டரில் தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு பொங்கல் பரிசுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .