பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை பெற 2020 2021 க்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதனை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.