Categories
உலக செய்திகள்

முதியோர் இல்லத்தில்… உருமாறிய கொரோனா… 3 பேர் உயிரிழப்பு…!!

முதியோர் இல்லத்தில் 100க்கும் அதிகமானோர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகள் இடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கொரோனா வைரசை விட மிகவும் அதிகமாகவும் வேகமாகவும் பரவும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு வந்தவர்கள் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் உருமாறிய கொரோனா  வைரஸ் பெல்ஜியம் நாட்டிலும் வேகமாக பரவிவருகிறது. மேலும் இந்நாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் பலருக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் மாதிரிகளை நன்கு பரிசோதித்ததில் அவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த முதியோர் இல்லத்தில் 111 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்த அந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியத்தில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் சிறிது நம்பிக்கையுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |