Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி விடுதலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தைக் காரணமாக ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை தேதியையும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனைக்காலம் இம்மாதத்தோடு முடிவடைகிறது.

இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டனர். இதையடுத்து சசிகலா ஜனவரி 27 அன்றும், இளவரசி பிப்ரவை 5ஆம் தேதியும் விடுதலையாவதாக அறிவித்துள்ளது.மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை ரூ.10கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |