மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, வேதனை தாங்காமல் மது அருந்திவிட்டு வீட்டின் பின்புறத்தில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார். இதனை கண்ட அவருடைய மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மடுகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.