Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கடும் வறட்சி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்கறிகள் விலை… கோயம்பேட்டில் 25 முதல் 40% வரை அதிகரிப்பு..!!

வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது.

கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது.

Image result for கோயம்பேடு காய்கறி சந்தைஇதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரிதுள்ளது. இந்த கடும் வறட்சியால் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திராவில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் சந்தைகளில் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |