13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 5 நாட்களில் மூன்று முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சிறுமியை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் இரண்டு நாட்கள் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் வீடு திரும்பிய சிறுமியை டிரக் ஓட்டுனர்கள் இருவர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.