Categories
தேசிய செய்திகள்

பிப்.14ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…. தேசியளவில் கவனம் பெற்ற பஞ்சாப் …!!

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அம்மாநில அரசு அறிவித்தது.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற வேண்டும்.

பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநில விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்கும் என்று அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |