Categories
பல்சுவை

மொபைல் வாங்க இதுவே சரியான நேரம்… அதிரடி ஆஃபர் அறிவிப்பு…!!!

பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது தனது பிக் சேவிங் டே சேவைத் தொடங்கியுள்ளது. ஜனவரி 20 முதல் 24 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.
மேலும், எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. மேலும், சில மொபைல் போனுக்கு அதிரடியாக ஆஃபர்களை வழங்குகிறது.

அந்த வகையில் சேம்சாங் கேலக்சி எஃப்41 மாடல் போன் ரூ.13,999க்கு விற்பனையாகும் என அறிவித்துள்ளது. இந்த போனின் மார்க்கெட் விலை ரூ.19,999 ஆகும். அதேபோல் கேலக்சி ஏ21எஸ், கேலக்சி ஏ31, கேலக்சி ஏ71 ரக மாடல்களுக்கும் முறையே ரூ.13,999, ரூ.16,999 மற்றும் ரூ.20,999 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மேலும், போக்கோ எக்ஸ் 3, போக்கோ எம் 2 ப்ரோ மற்றும் போக்கோ சி 3 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.14,999, ரூ.11,999 மற்றும் ரூ.6,999 க்கு சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது. அதேபோல், ஐபோன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |