Categories
தேசிய செய்திகள்

புதிய விதிகள் அமல்… தாமதம் செய்யும் வாட்ஸ்-ஆப் நிறுவனம்…!!!

வாட்ஸ் ஆப் நிறுவனம், புதிய தனியுரிமை விதிகளை அமல் செய்வதை தாமதப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் ஆப் நிறுவனம், தன் பயனாளர்கள், தங்களை பற்றிய முழுமையான தகவல்களையும் அளித்தால் மட்டுமே, தங்கள் சேவையை பயன்படுத்த முடியும் என்பது போல், பிரைவசி விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் டெலிகிராம், சிக்னல் போன்ற பிற சமூக வலைதளங்களில் சேர தொடங்கி விட்டனர். கடந்த 10 நாட்களில் மட்டும், மேற்கண்ட இரு சமூக வலைதள செயலிகளில் கோடிக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர்.

இதை உணர்ந்த வாட்ஸ் – ஆப் நிறுவனம், பிரைவசி விதிகளில் மாற்றம் கொண்டு வருவதை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. பிப்ரவரியில் கொண்டு வரப்படுவதாக இருந்த இந்த மாற்றம், மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |