சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அதே பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ பின்னால் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தகவலானது 108க்கு தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.