நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். மேலும் சுமித்ரா , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முழுமையாக நிறைவடைந்து விடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது .
![]()
இந்நிலையில் வலிமை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ந்து வலிமை அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.