ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.
உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. இன்று உங்களின் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்களின் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். உங்களின் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி ஏற்படும். நிதி நிலைமையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்துக் காணப்படும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.