Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மாலை 5.30 மணி வரை…. தமிழகத்தில் பரபரப்பு …!!

உலகையே மிரட்டி வந்த கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உலக நாடுகள் பலவற்றில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதே போல் இந்தியாவிலும் கோவிஷில்ட் மற்றும் கோவக்ச்சின் என்ற  இரண்டு தடுப்பு ஊசிகள் தயாரிக்கப்பட்டன. இன்று முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தமிழகத்திலும் மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மாலை ஐந்து முப்பது மணி நிலவரப்படி 2783 பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 166 மையங்களில் இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2683 பேருக்கு ஊசி போடப்பட்டு உள்ளது. சீரம் நிறுவனத்தின் கோவிஷில்ட் தடுப்பூசியை 2684 பேரும், பயோடெக் நிறுவனத்தின் கோவக்ச்சின் தடுப்பூசியை வெறும் 99 பேரும் செலுத்தி கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |