Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த படம்… மூன்றாம் முறையாக இணைய உள்ள பிரபல நடிகை… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுடன் மூன்றாவது முறையாக பிரபல நடிகை இணைய உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் நாராயணன் இயக்கத்தில் டி 43 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. டி 43 படத்தில் தனுஷிற்கு மாளவிகா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று தமன்னா எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை தமன்னா தனுஷுடன் வேங்கை, படிக்காதவன் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். நானே வருவேன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைகிரார் தமன்னா. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |