தூத்துக்குடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் அடைக்கப்பட்ட நிலையிலும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது முழுவீச்சில் மது கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினம் அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று மட்டும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதில் பீர் 2 ஆயிரத்து 500 பெட்டிகள், மற்றும் பிற மது வகைகள் 9000 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே அளவில் விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.