Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இது தெரியாம போச்சே….. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்…. வைரலாகும் CCTV வீடியோ….!!

தமிழக சினிமா திரையுலகை பொருத்தவரையில் அசைக்க முடியாத மிகப் பெரிய நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்கு காரணம் அவரது எளிமையும், ரசிகர்களுடன் அவர் வைத்திருக்கும் தொடர்பும் தான். ஒவ்வொரு முறையும் அவரது படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களோடு ரசிகராக முதல் நாள் முதல் ஷோ வில் படம் பார்க்க விரும்புவார் விஜய். அதன்படி,

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து படம் பார்த்து விட்டு திரும்பி சென்று விடுவார். இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் நிறைய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் தியேட்டரில் படம் பார்ப்பாரா ? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் விஜய் ரசிகர்களுடன் சென்னை தேவி தியேட்டரில் காலை 7:00 மணி காட்சியை பார்க்க வந்த CCTV வீடியோ வைரலாகி வருகிறது. 

Categories

Tech |