தமிழகத்தில் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்டு வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவின் பல மாநிலங்களில் பல பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இது வரை ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் போட்டிகளில் இந்திய அளவில் டாப் 5 சிறந்த போட்டியாளர்கள் யார் என்று பட்டியல் எடுக்கப்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஆரி அர்ஜுனன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் 4 இடங்களில் மற்ற மொழி போட்டியாளர்களே இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் வீட்டில் தனியாளாக சக போட்டியாளர்களின் சவால்களை சந்தித்து போட்டியிட்டுக் கொண்டு, ரசிகர்களால் ஒன் மேன் ஆர்மி என்று அழைக்கப்படும் ஆரி அர்ஜுனன் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.