பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்தது தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது . நாளை ஒளிபரப்பாகும் இறுதி போட்டியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . இறுதி போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி உள்ளனர் .
இந்நிலையில் வெளியேறிய சில போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர் . சமீபத்தில் 5 லட்சம் பணத்துடன் போட்டியிலிருந்து விலகிய கேபி, சுரேஷ் தாத்தாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் மற்றும் சிவானி, ஆஜித் ,சம்யுக்தா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படமும் வெளியாகியுள்ளது . தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .