நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது .
IT'S OFFICIAL… #MASTER #HINDI REMAKE… #Master – starring #Vijay and #VijaySethupathi – will now be remade in #Hindi… Endemol Shine India, Murad Khetani [Cine1 Studios] and 7 Screen Studio will produce the #Hindi adaptation… Casting for #Hindi remake will commence soon. pic.twitter.com/K0L5tWtg9r
— taran adarsh (@taran_adarsh) January 15, 2021
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமோல் சைன் , சினி 1 ஸ்டுடியோ, 7 ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது . இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .