கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளதாகவும், இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் என தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் இந்த பணி நாட்டின் வலிமையை காட்டுகிறது எனத்தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியா சுயசார்பு நாடாக தொடர்ந்து செயல்பட உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தியா முழுவதும் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இது தவிர முன்னுரிமை அடிப்படையில் இணைநோய்கள் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 50 வயதுக்கு உட்பட்டோரில் 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பல படிகளில் உலகிற்கு ஒரு முன்மாதிரி வைத்திருக்கிறோம். இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் சீனாவில் சிக்கித் தவித்த பிற நாடுகளின் குடிமக்களை வெளியேறியபோது, இந்தியா இந்தியர்களை மட்டுமல்ல, வந்தே பாரத் பணியின் கீழ் மற்ற நாடுகளின் மக்களையும் வெளியேற்றியது. கொரோனா தடுப்பூசியைத் தொடங்குவது என்பது மக்கள் முகமூடிகளை அணிந்துகொள்வது மற்றும் சமூக தூரத்தை பராமரிப்பது என்ற கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நாம் மற்றொரு சபதம் எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.