நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,இந்த நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுதனர் & விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மக்கள் சந்திக்க முடியவில்லை. இன்று நாம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை உணர்கிறோம்.
இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து பாராட்டுகிறது. இந்திய விஞ்ஞானிகளையும், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகளையும் உலகமே நம்புகிறது. நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். அடுத்த 2-3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம் சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல. தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.