Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல இருக்க கூடாது… மீறினால் உரிமம் ரத்து… எச்சரித்த சென்னை கமிஷனர்….!!

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு  பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் புத்தாண்டின் போது அளித்த ஒத்துழைப்பை இந்த காணும் பொங்கலன்றும் வழங்கி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மத்திய மாநில அரசானது 50% இரு கைகளுடன் மட்டும்தான் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி 100% இருக்கையை பயன்படுத்தி இயங்கும் தியேட்டர்கள் மீது வழக்கு பதிந்து அவற்றின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |