Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி…. இஸ்லாமியர்கள் போல இந்துக்கள் அதிகமா கொடுக்கணும் – பாஜக மூத்த தலைவர்

ராமர் கோவில் கட்டுவதற்காக இந்துக்கள் அதிகளவு நிதி வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார்

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானத்திற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் கோவில் கட்டுவதற்கான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியது.  அது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் கூறுகையில், “பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்து குடும்பத்தினரும் தங்களால் முடிந்த அளவு நிதியை ராமர் கோவில் கட்டுவதற்கு கொடுக்க வேண்டும்.

மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் நிதி வழங்கலாம். ஒரு மசூதி கட்ட இருக்கிறார்கள் என்றால் அதில் இஸ்லாமியர்களின் பங்கு அதிகமாக இருக்கும். அதே போன்று ராமர் கோயில் கட்டுவதில் இந்துக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

Categories

Tech |