கர்நாடகாவில் டிப்பர் லாரியும் வேனும் மோதிய கோர விபத்தில் 10 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தவனகரே என்ற பகுதியில் இருந்து 16 பெண்கள் விடுமுறையை கழிப்பதற்காக வேன் ஒன்றில் கோவா நோக்கில் சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். அந்த வேன் லிட்டிகட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் வேனில் டிரைவர் பிரவீன் மற்றும் 10 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் டிப்பர் லாரியின் டிரைவர் மற்றும் மீதமுள்ள பெண்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து 11 பேரின் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.