வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்த கோவிலில் புதிய கொடிமரம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் இருந்து கொடிமரமானது கொண்டுவரப்பட்டு எண்ணெய் தொட்டியில் போட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் கொடிமரம் நடும் விழாவிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து மரம் நடும் விழாவன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு ஸத்சங்க நாமம், 7 மணிக்கு கொடிமர சடங்குகள், காலை 9:5௦ முதல் 1௦:2௦ மணிக்குள் கொடிமரம் நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். .