பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் காதலியின் பிறந்த நாளன்று தன் காதலியை சந்திப்பதற்காக 2000 கிலோ மீட்டர் பயணம் செய்தார்.
ஆன்லைனில் சந்தித்த பெண் அவரை அடையாளம் காண மறுத்து விட்டார். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசை அழைத்து அவரை பிடித்துக் கொடுத்து விட்டனர். 21 வயதான அந்த நபர் பெங்களூருவிலிருந்து லக்னோ விமானத்திலும் பின்னர் லகிம்பூர் கெரிக்கு ஒரு பஸ்சிலும் பயணம் செய்து தன் காதலியை காண சென்றார். அவருக்காக சாக்லேட்கள், ஒரு கரடி பொம்மை போன்ற பல பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்றிருந்தார். உத்தரப் பிரதேசத்தின் டியோரிய மாவட்டத்தை சேர்ந்த அவர் மெக்கானிக்காக பணிபுரிகிறார்.
தன் காதலியை காண ஒரு இரவுக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இளைஞனுக்கு எதிராக முதல் அறிக்கையை தாக்கல் செய்ய மறுத்து விட்டன. இதனால் அவர் திங்களன்று துணைப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தனி விருப்பத்தின் விடுவிக்கப்பட்டார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சல்மானை எச்சரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு சமூக வலைத்தளம் மூலம் பெண்ணுடன் நட்பு வளர்த்து கொண்டதாகவும், காதலிக்குபிறந்தநாள் பரிசுகளை வழங்க பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து பயணித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் அந்த பெண்ணிற்கு தன்னை அடையாளம் தெரியாததால் அவர் மற்றும் அப்பெண்ணின் பெற்றோர் தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். காதலியை சர்ப்ரைஸ் படுத்துவதற்காக வந்து கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் சல்மான்.