Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார்.

Related image

இந்நிலையில் சிறையில் இருக்கும்  சசிகலாவின்  தண்டனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் சசிகலா குறித்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்; சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |