பயனர்களின் பாதுகாப்பை மீறியதாக கடன் கொடுக்கும் செயலிகள் சிலது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
தற்போதைய காலகட்டத்தில் எதுவாயினும் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் நடத்தி முடிக்க முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. அதேபோன்று ஒருவரது KYCயை மட்டும் வைத்து ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலமாக பலரும் கடன் வாங்கி வருகின்றனர். எந்த அத்தாட்சியும் தேவையில்லை ஐந்து நிமிடத்தில் கடன் பெறலாம் என்று கூறி கடனைக் கொடுத்து விட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கிறது என பல புகார்கள் இணையதளத்தில் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலம் கடன் வாங்கி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கடன் கொடுக்கும் செயலிகள் கூகுள் நிறுவனத்தால் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.