Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா -யுவன் சங்கர் ராஜா இணையும் ‘டாப் டக்கர் ஆல்பம்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்‌…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரஷ்மிக்கா நடித்துள்ள ‘டாப் டக்கர்’ ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார்.  இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் .

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் டாப் டக்கர் ஆல்பம் தயாராகியுள்ளது . இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் உச்சன அமித் பாட்ஷா ஆகியோர் இசையில் ஜோனிடா காந்தி இந்த பாடலை பாடியுள்ளார். இதனை இயக்குனர் அமர் பிரீத் ஜிஎஸ் சாப்ரா இயக்குகிறார் . தற்போது இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்தப் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |