Categories
மாநில செய்திகள்

பாசம் நிறைய கொடுத்துட்டாங்க…. நான் தமிழை பாதுகாப்பேன்…. அது என்னோட கடமை – ராகுல் காந்தி

தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது என் கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

நாடு முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மதுரை வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தியும் சீறிப்பாயும் காளைகளையும் அதனை அடக்க முயற்சிக்கும் வீரர்களின் விளையாட்டையும் கண்டுகளித்தார்.

பின்னர் விழா மேடையில் ராகுல் காந்தி பேசிய போது “தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் நேரில் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது. காளைகளை அவற்றை அடக்கும் வீரர்களையும் இங்கு இருப்பவர்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கின்றனர் ஒரு காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் பல ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

நமது நாட்டின் எதிர்காலத்திற்கு தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிக மிக அவசியமான ஒன்று என்பதை மனதில் வைத்து தான் நான் இங்கு வந்துள்ளேன். கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் ஒதுக்கி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு சில செய்திகளை கொடுக்கவும் இங்கு வந்தேன். தமிழக மக்களிடமிருந்து அளவுக்கதிகமான பாசத்தையும் அன்பையும் நான் பெற்றுள்ளேன் இனி அவர்களின் மொழி, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை பாதுகாப்பது தான் எனது கடமை” என பேசினார்

Categories

Tech |